தர்ஷன் - லொஸ்லியா நடிப்பில் கூகுள் குட்டப்பா டீசர் வெளியானது!!

 


மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றிய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தை கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாரித்து இந்த படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் இவருடன் இலங்கையர்களான பிக்பாஸ் பிரபலம் தர்ஷன், லொஸ்லியா, யோகிபாபு, மனோபாலா என பலர் நடித்து வருகின்றனர்.

கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சபரி-சரவணன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் குட்டப்பாவாக வரும் ரோபோ செய்யும் சேட்டைகள் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன.

குட்டப்பா ரோபோ சமையல் செய்வது, காபி பரிமாறுவது, அம்மியில் மிளகாய் அரைப்பது உள்பட பல வேலைகளை செய்கிறது. அது மட்டுமின்றி வயலில் நாத்து நடுவது உள்பட விவசாய வேலைகளையும் செய்கிறது.

இந்த ரோபோவை பார்த்து அது ஆம்பிளையா? பொம்பளையா? என அப்பாவியாக ஒரு பெண் கேள்வி கேட்கும் காட்சியும் டீசரில் உள்ளது. முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் மலையாளத்தை போலவே தமிழிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.