4 மருத்துவர்கள் உட்பட 17 பேருக்கு ஹற்றனில் கொரோனா தொற்று உறுதி!!

 


ஹற்றன் டிக்கோயா வைத்தியசாலையின் 17 பணியாளர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி 4 மருத்துவர்கள், 6 தாதிகள் மற்றும் 7 கனிஷ்ட தர ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வைத்தியசாலையின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை டிக்கோயா ஆதார வைத்திய சாலையின் கொவிட் சிகிச்சை வார்டுகள் அவற்றின் கொள்ளளவுத் திறனை மீறியுள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.