தொழிலதிபர் ஒருவரின் முன்மாதிரியான செயல் - யாழில் சம்பவம்!

 


யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையாற்றி வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் முகமாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதி பங்களிப்பில் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.

  தற்போது நாட்டில் கொரோனா இடர் காலத்தில் சேவையாற்றியவர்களுக்கு இன்றைய தினம் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.

அதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் 84 பொதுச் சுகாதார பரிசோதகர்கள், 276 குடும்பநல உத்தியோகத்தர்களுக்குரிய உதவித் தொகை இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது இந்நிலையில் இராணுவத்தின் 512 வது பிரிகேட் தலைமையகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் ஆகியோர் கலந்துகொண்டு இந்த உதவித்தொகையினை வழங்கி வைத்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.