கைக்குண்டுடன் களுவாஞ்சிக்குடியில் ஒருவர் கைது!

 


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் கைகுண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விநாயகபுரம் அமைப்பாறையை சேர்ந்த வியாஜராச பிரசாந்தன் எனும் 34 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும்போதே இன்று காலை 10.30 மணிக்கு விசேட அதிரடிப்படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யபட்டவரிடம் இருந்து 1 கைகுண்டும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.