நிறைவடைந்தது கிளிநொச்சி அகழ்வுப் பணி!!

 


கிளிநொச்சி- விளாவோடை வயல் பகுதியிலிருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த அகழ்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

குறித்த பகுதியில் 2 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின்போது ஒரு கைக்குண்டு, தொடர்பாடல் சாதனம், இரண்டு தலைக்கவசங்கள்,  ரவைக்கூடுகள்,  உடைகள் மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தும் உணவு பொதிகள் உள்ளிட்ட பொருட்களின் எச்சங்களுடன், மனித எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்டவைகள், 25 வருடங்கள் பழமையானவையாக இருக்கலாம் எனவும் மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட தடய பொருட்கள் அனைத்திலும் 97ம் ஆண்டுக்கு முற்பட்ட திகதியிடப்பட்ட பொருட்களாகவே காணப்பட்டுள்ள நிலையில் இரண்டும் ஒப்பீட்டளவில் ஒரே காலப்பகுதியை சேர்ந்தவையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் இதன்போது மீட்கப்பட்ட கைக்குண்டு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் செயலிழக்க செய்யப்படவுள்ளதாகவும் அது தற்பொழுது பாதுகாப்பாக விசேட அதிரடிப் படையினரிடம் பொலிஸாரால் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை அங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் தடய பொருட்கள் அனைத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.