ஆப்கானிஸ்தானில் பர்தா போடாததால் இளம்பெண் சுட்டுக் கொலை!!

 


ஆப்கானிஸ்தானில் பர்தா அணியாத இளம்பெண்ணை, தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான ஆடை சுதந்திரத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில பெண்ணியவாதிகள் ஆடை கட்டுப்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருவது வழக்கமான ஒன்று. அதேசமயத்தில் பெண்கள் ஆடை கட்டுப்பாடு உடன் அணிவது அவசியம் என பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில் 21 வயது இளம் பெண் பர்தா அணியாமல் காரில் பயணம் செய்த போது, அவரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாலக் மாவட்டத்தை சேர்ந்தவர் நசானின். 21 வயதான அந்த இளம்பெண் தனது சொந்த மாவட்டத்திற்கு காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரை இடைமறித்த தலிபான்கள், இஸ்லாமிய மத நம்பிக்கையின்படி பர்தா அணிவதை கண்டித்து அவரை பர்தா அணிய வலியுறுத்தி உள்ளனர்.

அதை ஏற்க மறுத்த அந்த இளம்பெண், நான் பர்தா அணிய முடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த தலிபான் தீவிரவாதிகள் அவரை அந்த இடத்திலேயே சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மத சட்டங்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டுமென்று அந்த நாட்டில் தலிபான் தீவிரவாதிகள் வலியுறுத்தி இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதற்கு, உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறது.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.