குடும்பத் தகராறில் ஆணொருவர் பலி!!

 


யாழில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறையில் நள்ளிரவு 12.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது.

 அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு  கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு கொண்டுசென்ற போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.