நித்யானந்தா வெளியிட்ட அடுத்த அதிரடி அறிவிப்பு!

 


பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நிலையில் தலைமறைவாகி வாழ்ந்துவரும் நித்தியானந்தா தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்கள் உடல நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில், தன்னை மதுரை ஆதீன மடத்தின்  293 வது பீடாதிபதியாக அறிவித்துள்ளார்.

தற்போதைய மடாதிபதியான  மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதார், சுவாச பிரச்சனை காரணமாக, மதுரை அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆக்ஸ்ட் 8ம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை முன்னதாக நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அறிவிக்கப்பட்ட போது, கடும் சர்ச்சை எழுந்தததை அடுத்து, அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.

வாபஸ் பெறப்பட்ட உத்தரவை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் 2018 ஆம் ஆண்டு வெளியான உத்தரவில், நித்தியானந்த மதுரை ஆதீன மடத்திற்குள் நிழைய தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் அருகாமையில் உள்ள தனித் தீவு ஒன்றினை, நித்தியானந்தா சொந்தமாக வாங்கி 'கைலாசவாக' மாற்றியிருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது.

அதன்பின்னர் மாயமான நித்தியானந்தா கைலாசா என்ற ஒரு தனிநாட்டையும், அதற்கென்று நாணயம் மற்றும் பாஸ்போர்ட்டும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் .

இந்த நிலையில் கைலாசாவில் குடியேறிய நித்தியானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்பொழுது மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக அறிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  


Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.