ஒலிம்பிக் போட்டியில் முதலாவது இடத்தில் அமெரிக்கா!!

 


நூற்றுக்கணக்கான போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் களமிறங்கிய அமெரிக்கா 2020 ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக மூன்றாவது கோடைக்கால விளையாட்டுக்கான தங்கப் பதக்க அட்டவணையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவை பின்னுக்குத் தள்ளி 39 தங்கப் பதக்கத்துடன் சீனாவை பின்தள்ளி அமெரிக்கா முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

இதற்கு அமைய முதல் இடத்திலுள்ள அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கல பதக்கங்களுமாக மொத்தம் 113 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

சீனா 38 தங்கம் 32 வெள்ளி 18 வெண்கல பதக்கங்களைப் பெற்று 88 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

போட்டிகளை நடத்தும் ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி. 17 வெண்கல பதங்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இதேவேளை, பிரித்தானியா 22 தங்கம், 21 வெள்ளி மற்றும் 25 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று நான்காவது இடத்திலுள்ளது.

ரஷ்ய ஒலிம்பிக் குழு 20 தங்கப் பதக்கங்களுடன் 5வது இடத்திலும் அவுஸ்ரேலியா 17 தங்கப் பதக்கங்களுடன் 6 ஆவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.


Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.