கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு ஒரு அறிவிப்பு!!


2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் அதனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இதுவரையில் 5 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்காக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.