நினைவலை- கவிதை!!

 
பூக்கள் சிரித்தனர்,

புன்னகை சிந்தினர், 

புதிதொரு விடியலில்...


பாக்களை  கருக்கிட

பறவைகள் வருமென 

பிஞ்சுகள்  எண்ணவில்லை,


காரீயம்  அணைத்தது

கானாங்குருவிகளின் 

கனவுத் தீபங்களை,...


கொப்பளித்த குருதியில்

கொந்தளித்தது

உணர்வுகள்....


வெள்ளைப் பூக்கள்

செம்பூக்களாயின,

அங்கங்கள்  கிடந்தன

அங்கங்கே ......


வான் பறவையின்

வக்கிரம் தீர்ந்தது....

பற்றி எரிந்தன

பள்ளிச் சிட்டுகள்.


ஓயாத ஓலம்

ஓங்கியே ஒலித்தது,  

தாளாது துயரம் 

தரணியை நனைத்தது....


ஆண்டுகள் கடப்பினும்

காயாது கண்ணீர், 

செஞ்சோலை நினைவுகள் 

அணைந்திடக் கூடுமோ....


கோபிகைகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.