ஒருவர் மட்டுமே வௌியில் செல்ல முடியும் – இராணுவத்தளபதி!!
புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இன்றைய தினம் வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தொழிலுக்கு செல்பவர்கள் வழமைப் போல வெளியில் செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்டது.
அதற்கமை,
- வணிக வளாகங்களுக்கு அதன் மொத்த வாடிக்கையாளர் திறனில் 25 சதவீதத்திற்கு மட்டுமே அனுமதி
- பல்பொருள் அங்காடியினுள் ஒரே நேரத்தில் அதன் மொத்த திறனில் 25 சதவீதமானவர்களுக்கு மட்டுமே அனுமதி
- பகல்நேர பராமரிப்பு மையங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.
- உடல் கட்டமைப்பு மையங்கள் மற்றும் உட்புற விளையாட்டரங்குகள் இன்று முதல் மூடப்படும்.
- சிறுவர் பூங்காக்கள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் கடற்கரைகளில் ஒன்று கூடுவதற்கு இன்றிலிருந்து தடை
- நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்கள் இன்று முதல் மூடப்படுகின்றன.
- ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை விடுதிகள் அவற்றின் மொத்த திறனில் 25 சதவீதமானவர்களுக்கு மட்டுமே திறந்திருக்க அனுமதி
- Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை