பல்கலைக்கழகத்திலேயே ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை!!

 


ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்திலேயே பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை), விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி உடன் காணொளிக் காட்சி ஊடாக தமிழக முதல்வர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது முதலமைச்சர், “கர்நாடகாவில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்தகைய பல்கலைக்கழகம் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதேபோன்று தமிழக இளைஞர்களுக்கும் தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு விப்ரோ நிறுவனம் முன்வர வேண்டும்” என தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.