சுகாதார அதிகாரி மீது தாக்குதல் - வாழைச்சேனையில் சம்பவம்!!
வாழைச்சேனை பகுதியில் மண்வெட்டியை கொண்டு பொது சுகாதார அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த அதிகாரி, பலத்த காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளை செய்யும் போது அவற்றுக்கு இடையூறாக செயற்படுதல், ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் குற்றவியல் செயல்களில் ஈடுபடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். இந் நிலையில் கைதான சந்தேக நபர் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார்.
சந்தேக நபர் முகக் கவசம் அணியாத சந்தர்ப்பத்தில், பொது சுகாதார அதிகாரி முகக் கவசத்தை அணியுமாறு வலியுறுத்தியபோது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை