நீர்வெட்டு குறித்த அறிவிப்பு வெளியானது!!


மாத்தளையில் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை முற்பகல் 8 மணி தொடக்கம் நாளை மறுநாள் 8.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. உடுகம, பலாபத்வெல, தொஸ்தரவத்த, துங்கொலவத்த மற்றும் சமன்தவ நிகவல பீ பிரிவு ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

´விசல் மாதளே´ நீர் ​வேலைத்திட்டத்திற்கு அமைய நீர் குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக ஏற்படக்கூடும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.