இன்று நள்ளிரவு முதல்திருமண நிகழ்வுகளை நடத்த தடை!!
திருமண நிகழ்வுகளை நடத்த இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரும் வரையில், வீடுகளிலும் மண்டபங்களிலும் திருமணங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் சில கட்டுப்பாடுகளுடன் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஸித் ரோஹன அறிவித்துள்ளார்.
அதற்கமைய, பதிவுத் திருமணங்களை சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி வழங்கப்படமாட்டாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை