தங்கத்தின் விலையில் சரிவு!!

 


தங்கத்தின் விலை தற்போது சரிவில் உள்ளதாகவும் மேலும் அதன் விலைக் குறைய வாய்ப்புள்ளதாகவும் வர்த்தக நிபயனர்கள் கருது தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலையானது கடந்த வாரத் தொடக்கத்தில் ஏற்றம் காணுவது போல் இருந்தாலும், பிற்பாதியில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இது வரும் வாரத்திலும் சற்று சரிவினைக் காணும் விதமாகவே காணப்படுகிறது. இதற்கிடையில் இன்னும் குறைந்தால், எவ்வளவு குறையும்? எப்போது வாங்கலாம் என பல கேள்விகள் எழுந்துள்ளன. தங்கம் விலையானது கடந்த வாரத்தில் இருந்து சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது.

இது வரும் வாரத்திலும் சற்று சரிவினைக் காணலாம் என்பது போலவே காணப்படுகின்றது. இது டாலரின் மதிப்பு மீண்டும் ஏற்றத்தினைக் கண்டு வரும் நிலையில், தங்கம் விலை இன்னும் சரிவினைக் காணலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. கடந்த சில வாரங்களாகவே அமெரிக்காவில் வேலையின்மை நலன் குறித்த தரவானது, சந்தைக்கு சாதகமாகவே வந்து கொண்டுள்ளது.

இதுவும் டொலருக்கு சாதகமாக வந்துள்ளது. இது அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே காட்டுகின்றது. இதுவும் சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், இதுவும் சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் பத்திர சந்தையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது டாலருக்கு உகந்த விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு புறம் அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கமானது அச்சம் கொள்ளும் வகையில் இருந்து வருகின்றது.

பரவி வரும் கொரோனாவின் காரணமாக ஏற்கனவே பல நகரங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தங்கத்தின் அதிக விலை சரிவினைக் தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு மத்தியில் பங்கு சந்தைகள், பத்திர சந்தைகள் என பலவும் அபாயகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது.

இதனால் நீண்டகால நோக்கில் கொரோனாவின் தாக்கத்தினை பொறுத்து தங்கம் விலையானது சற்று அதிகரித்தாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் தங்கமானது விருப்பமான கவர்ச்சிகரமான, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் தற்போது வேலை வாய்ப்பு சந்தையானது வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், அது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது.

இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் இருக்கலாம் என்ற நிலையும் இருந்து வருகின்றது. இது குறித்து முதலீட்டாளர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவும் வரும் வாரங்களில் சந்தையில் முக்கிய காரணியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்ட பரவல் என்பது குறைந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மூன்றாம் கட்ட பரவல் குறித்த அச்சமும் இருந்து வருகின்றது. இதனால் நீண்டகால நோக்கில் விலையை இது ஆதரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்து வாங்கலாம். சந்தையின் போக்கினை பொறுத்து கவனித்து செயல்படுவது நல்லது.

சில காரணிகள் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்க இது சரியான இடம் தான் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் விலை குறைந்த பின்னர் வாங்குவது சந்தைக்கு சாதகமாக உள்ளது. காமெக்ஸ் தங்கம் விலையானது கடந்த வார தொடக்கத்தில் சற்று ஏற்றத்தினைக் கண்ட நிலையில், வாரத்தின் பிற்பாதியில் சற்று சரிவினைக் கண்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று 1780.90 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்ச விலையாக 1772 டாலர்கள் வரையில் சென்று திரும்பியது. இதே செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 1797.60 டாலர்கள் வரையில் சென்றது. எனினும் முடிவில் வெள்ளிக்கிழமையன்று 1782.50 டாலர்களாக முடிவுற்றது.

இதே வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், முடிவிலும் சரிவினைக் கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 23.745 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 23.955 டாலர்கள் வரையிலும், வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 22.835 டாலர்கள் வரையிலும், முடிவில் 22.968 டாலர்களாக முடிவடைந்தது. இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 10 கிராமுக்கு 46,950 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 46,816 ரூபாயாக குறைந்தது.

எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 47,850 ரூபாய் வரையில் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 47,158 ரூபாயாக முடிவுற்றது. கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது தங்கம் விலையானது 9,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனிமும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலை திங்கட்கிழமையன்று 63,141 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 63,866 ரூபாயினை தொட்டது. மீண்டும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 61,721 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. வெள்ளி விலையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 15,900 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

எனினும் மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம். தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் திங்கட்கிழமையன்று, 48,530 ரூபாயாக தொடங்கியது. இன்று அதன் விலை 48,710 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 66.66 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 666 ரூபாயாகவும், கிலோவுக்கு 66,600 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 68,200 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 66,600 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,600 ரூபாய் குறைந்துள்ளது.  கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.