திடீரென மயங்கிய இருவரில் ஒருவர் பலி!!

 


பண்டாரவளை இன்று பகல் இருவர் மயங்கி விழுந்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றவர் தொடர்ந்தும் மயக்க நிலையில் உள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மயக்கமுற்ற இருவருக்கும் கொரோனா தொற்றாளர்களாக இருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகின்றது. பண்டாரவளை பஸ் நிலையத்திற்கு சென்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவர் பண்டாரவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருக்கு ' அன்டிஜன்' பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொவிட் தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்ட போதிலும், அவருக்கு பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.

இதேவேளை , பண்டாரவளையில், உணவகம் ஒன்றுக்கு சென்ற ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், அவர் உடனடியாக பண்டாரவளை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் , பல மணித்தியாலங்கள் ஆகியும் அவர் தொடர்ந்தும் மயக்க நிலையிலேயே உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவருக்கும் ' என்டிஜன்' பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில். அந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

கொரோனா அச்சம் காரணமாக கீழே விழுந்த குறித்த இருவரையும் எவருமே தூக்க முன்வராத நிலையில், பொலிசார் கொவிட் தொற்று பரிசோதனையாளர்களை வரவழைத்து குறித்த இரு நபர்களையும் பண்டாரவளை அரசினர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

பண்டாரவளை பஸ் நிலையத்தில் உயிரிழந்தவரின் சடலம் பண்டாரவளை அரசினர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மற்றையவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இந்நிலையில் கொஸ்லந்தையில் தனது வீட்டில் கொரோனா தொற்றில் சிகிச்சைப் பெற்று வந்த 63 வயதுடைய பெண் ஒருவர் இன்று பகல் வீட்டிலேயே உயிரிழந்ததாக அப்பிரதேச பொது சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்துள்ளார்.  

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.