எதிர்க்கட்சித் தலைவர் சஜித் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நன்கொடை!

 


யாழ்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 2,320,000 பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய மருத்துவமனை உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தும் “ஜன சுவய” கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டத்தின் 22 ஆவது கட்டமாக இருபத்தி மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபா (2,320,000.00/-) பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய மருத்துவமனை உபகரணம் இன்று(04) யாழ்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

2,320,000 ரூபா பெறுமதி வாய்ந்த Dialysis Machine with Portable RO System இயந்திரமொன்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் யாழ் போதனா வைத்தியசாலையின் பனிப்பாளர் வைத்தியர் பவனதராஜாவிடம் இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் வைத்தியர் ராஜித சேனாரத்ன, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர், யாழ் மாவட்ட அமைப்பாளர் திருமதி உமாசந்திரா பிரகாஷ் உள்ளிட்ட பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர். 

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.