ஆலய முகப்பில் உயிரிழந்த மூதாட்டி!!

 


யாழ்ப்பா ணம் வல்வெட்டித்துறையில் இருந்து கொட்டடியில் உள்ள ஆலயத்துக்கு வந்த மூதாட்டி ஒருவர் ஆலய வாயிலிலேயே சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. சம்பவத்தில் ஸ்ரீராஜேந்திரா சந்திரவதனா (வயது 68) என்னும் நெடியகாடு, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரது உடலம் பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவரது மரண விசாரணையைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.   

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.