நாளை தடுப்பூசி போட்டால் தங்கக்காசு கிடைக்கும்!

 


கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில் நாளை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன்மூலம் நோயின் தீவிரத்தையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் தவிர்க்க முடியும் என்பதாலும் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் என்பதாலும் நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் ஜனவரி மாதத்திலிருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்

தமிழ்நாட்டில் சிறந்த முறையில் தடுப்பூசி பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நாளை(செப்டம்பர் 12) 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரேநாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதற்காக ‘தடுப்பூசி போடு மக்கா’ என்ற பிரச்சார பாடல் மூலம் வீதி வீதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் சில இடங்களில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் விஜயகுமார்,” ஈரோடு மாவட்டம் பவானியில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் மக்களுக்கு தங்க நாணயம், வெள்ளி விளக்கு, வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி,” தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 12) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதற்காக, கோவில்பட்டி நகர் பகுதிகளில் 33 மையங்களிலும், கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் 69 மையங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களில் 100 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் மூன்று பேருக்கு தங்கக்காசுகளும், அடுத்த மூன்று பேருக்கு வயர்லெஸ் ஹெட் செட்களும், 50 பேருக்கு சேலைகளும், 30 பேருக்கு ஹாட் பாக்ஸும், 20 பேருக்கு டி-ஷர்ட்டுகளும் பரிசாக வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

அதுபோன்று மதுரை மற்றும் காஞ்சிபுரத்திலும் நாளை நடைபெறும் தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

-வினிதா

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.