கிரீடங்களில் கீறல்கள்..!!


மனப்பிறழ்வு வியாபித்திருக்கிறது

உலகெங்கும்..
என்னசெய்வதென்றே அறியாமல் உறைந்து கிடக்கிறது மானுடம்..
யூகங்களினாலும் தன்னறிவை பறைச்சாற்றும்
சுயத்தம்பட்டங்களினாலும் செவிகள் நிரம்பித் ததும்புகின்றன...
ஆயுதங்களினாலும்அறிவியல் சாதனைகளினாலும்
ஆன்மீக
அழுக்குகளினாலும்
அராஜக
ஆண்டைத்தனங்களினாலும்
எதையும் சாதிக்க முடியாதென்பதை மெய்ப்பித்துக்கொண்டே இருக்கிறது
ஒரு கிருமி.....
தெளிவான சிந்தனையும் உடல்பலம் கொண்டவர்களுமே
அஞ்சி நடுங்கி இருக்கின்ற இந்த இக்கட்டில்;
பாவம் சில மனநலம்குன்றிய மனவளர்ச்சியற்ற மனிதர்கள் நிலை?
வாழ்வுரிமை வேண்டுமென மனிதர்கள் மனிதர்களிடம் போராடிக்கொண்டிருக்கிற இந்த சாக்கடைமண்ணில்
மரணத்தை பரிசாக ஏந்திக்கொண்டுவந்து
சமதர்மம் சமைத்திருக்கிறது கொரோணா.
கோயில்களில்;
மசூதிகளில்;
தேவாலயங்களில்;
கடவுள்கள் ஒளிந்தலைகிறார்கள்...
காலம் நல்ல மருத்துவன் என்பார்கள்
காலம் தற்போது தன்னை நல்லாசிரியனாகவும் நிறுவியுள்ளது...
கடுமையாக தண்டிக்கின்ற ஆசிரியன்தான்.
கீழ்படிந்தே ஆகவேண்டும்
மீறினால் தேறமாட்டோம்..
மிகுந்த மனஅழுத்தத்தோடும்
கையறுநிலையின் சுய இரக்கத்தோடும் மானுடம் தவிப்பது உயிர்வாழவே என்கிறபோது
எல்லாக்கிரீடங்களும் பொடிப்பொடியாக உடைபடுவதை காணமுடிகிறது!
-அன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.