அரசியல் கைதிகளை பார்வையிட்டனர் பொ.கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினர்!📸

 இன்று 16.09.2021 வியாழக்கிழமை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  சிறைச்சாலைக்குள் சென்று அரசியல் கைதிகளை பார்வையிட்டனர்.இவர்கள்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினராகும்.


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி  பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் சட்ட ஆலோசகர் காண்டீபன் அவர்களும் சென்றிருந்தனர்.


இதன்போது அரசியல் கைதிகளை சந்தித்த குழுவினர் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் உரிய தரப்புகளுக்கு பேசி  கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்தனர்,

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.