'அப்பன் நாளைக்கு பாரணை மதியம் சாப்பாட்டுக்கு வந்து விடு'


நான் வியன்னாவில் வாழ்ந்த காலங்களில் எனது நண்பி ஒருவரின் அன்னையிடமிருந்து வருடாவருடம் கந்தசஷ்டி விரத / கெளரி விரத முடிவில் மட்டுமல்ல ஒவ்வொரு செப்டம்பர் 26 ம் திகதியும் அழைப்பு வந்து விடும்.


ஆம் பன்னிரு நாட்கள் அவர் நீராகாரம் மட்டும் அருந்தி பதின்மூன்றாம் நாள் உணவருந்தும் நாள் அது.


பின்னாளில்தான் பல தமிழீழ அன்னையர் இதைக் கடைப்பிடிப்பதை அறிந்தேன்.


தமிழர்களின் குல தெய்வ வழிபாடு பொய்யல்ல - தம்மைக் காத்தவர்களை வணங்கும் மரபு அது.


திலீபன் தமிழர்களின் குல  தெய்வம்.


#திலீபம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.