ஈழத்து பாடகர் வர்ணராமேஸ்வரன் கொரோனாவினால் சாவடைந்துள்ளார்!

 ஈழத்து எழுச்சிப்பாடல்கள் பலவற்றைப் பாடியவர். மாவீரர் நாள் பாடலைப் பாடியவர். புலம் பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்ந்துவந்தவர்.சுகையீனம் காரணமாக இன்று சாவடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இராமேஸ்வரன். தந்
தையார் கலாபூசணம், சங்கீதரத்தினம் முருகேசு வர்ணகுலசிங்கம் ஒரு சிறந்த இசைப் பாரம்பரியத்திலே தோன்றியவர். இவரது தந்தை வழிப்பேரனார், தாய் வழிப்பேரனாரும் இசை நாடகக் கலைஞர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். இராமேசுவரன் பண்ணிசை மூலமும், பின்னர் மிருதங்கம் வாசிப்பது மற்றும் ஆர்மோனியம் வாசிப்பதன் மூலமும் தந்தையின் பயிற்சியில் கருநாடக இசையைக் கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பிரிவில் மாணவனாக இணைந்து கொண்டார். அதன் வாயிலாக நான்கு ஆண்டுகள் இசைக்கலைமணி என்னும் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்று, அங்கேயே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இசை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும் பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். இராமேசுவரன் பண்ணிசை மூலமும் பின்னர் மிருதங்கம் வாசிப்பது மற்றும் ஆர்மோனியம் வாசிப்பதன் மூலமும் தந்தையின் பயிற்சியில் கருநாடக இசையைக் கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பிரிவில் மாணவனாக இணைந்து கொண்டார். அதன் வாயிலாக நான்கு ஆண்டுகள் இசைக்கலைமணி என்னும் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்று அங்கேயே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இசை விரிவுரையாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


விடுதலைப்பாடல்களுக்கூடாக எமது போராட்டத்திற்கு பலம் சேர்த்த ஈழத்துப்பாடகர் வர்ணராமேஸ்வரன் அவர்களுக்குதமிழ் அருள் இணையம் புகழ்வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவர் பாடிய பாடல்கள்..!

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்!


 தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!


இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!


உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!


எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!


வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!


உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!


சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!


உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!


அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!


உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!

எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!


எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!


இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.