யேர்மன் ஏஞ்சலா மெர்க்கல் ஓய்வு பெற்றார்
ஜேர்மனியில் 16 ஆண்டுகள் சேன்ஸலராக பதவி வகித்த ஏஞ்சலா மெர்க்கல் ஓய்வு பெறும் நிலையில், அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என அறிந்துகொள்ள பலரும் ஆவலாக இருக்கலாம்.
அத்தகையவர்களுக்கு, ஏஞ்சலா ஓய்வு பெறப்போவது உண்மைதான் என்றாலும், புதிய அரசு அமையும் வரையில் அவர்தான் நாட்டை பொறுப்பாக கவனித்துக்கொள்ளப்போகிறார் என்பது நினைவிலிருக்கட்டும்.
இதற்கு முன், ஓய்வு பெற்றதும் என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு ஏஞ்சலா நேரடியாக பதிலளித்ததில்லை. இந்நிலையில், முதன்முதலாக அந்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இத்தனை காலம் தான் வகித்து வந்த பொறுப்புகளை மற்றொருவர் பார்த்துக்கொள்ள உள்ள நிலையில், தான் கொஞ்சம் வாசிக்கப்போவதாகவும், தன் கண்கள் களைத்துப்போகும்போது தான் கொஞ்சம் ஓய்வு எடுக்கப்போவதாகவும் தெரிவிக்கிறார். அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று பார்ப்போம் என்கிறார் அவர்.
இதற்கிடையில், ஓய்வு பெறும் ஏஞ்சலாவுக்கு மாதம் 15,000 யூரோக்கள் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. அத்துடன், ஓய்வு பெற்றாலும், அவருக்கு நாடாளுமன்ற வளாகத்திலேயே ஒரு அலுவலகம் ஒதுக்கப்பட உள்ளது. அவருக்கு பாதுகாவலர்கள், ஒரு அரசு வாகனம் வழங்கப்படுவதுடன், அதற்கொரு சாரதி, இரண்டு ஆலோசகர்கள், மற்றும் ஒரு செயலர் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள்.
இதற்கு முன் சேன்ஸலராக இருந்த சிலர் ஓய்வு பெற்ற பிறகு பிரபல பேச்சாளர்களாக நல்ல வருவாய் ஈட்டியுள்ளார்கள்.. அவர்களுக்கு சற்றும் குறைவற்றவரான ஏஞ்சலாவும் அதைச் செய்யவும் வாய்ப்புள்ளது!
கருத்துகள் இல்லை