ஜீ எஸ் பி வரிச்சலுகையும் சுமந்திரன் கனவும்!
ஜீ எஸ்பி வரச் சலுகை வழங்குவது தொடர்பாக ஆராய வந்த குழு கூட்டமைப்பை மாத்திரம் சந்தித்திருப்பது தவறானது.
ஏனென்றால் தற்போது தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் கூட்டமைப்பினர் தான் என்று சொல்ல முடியாத அளவிற்கு சுமந்திரனின் செயற்பாடுகளால் அந்த கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது.
ஐரோப்பிய பிரதிநிதிகள் ஊர்களுக்கு சென்று சாதாரண மக்களையும் சந்தித்திருக்க வேண்டும். அப்போது தான் உண்மை நிலவரத்தை அவர்கள் அறிந்திருக்க முடியும்.
இந்த சந்திப்பு முடிந்த வேளை சுமந்திரன் கூறிய கருத்துக்கள் தான் பிரச்சினையாகவும் சந்தேகமாகவும் உள்ளது. அதாவது நாட்டில் வாழும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய என்று அவர் சொல்லியிருப்பது 19 ஆம் திருத்த ஒற்றையாட்சி அரசியலமைப்புத்தான். அதாவது அனைவரும் ஏற்றக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பு என்றால் அல்லது தீர்வு என்றால் அது சிங்களவர்களுக்கு சாதகமானதாக மட்டுமே இருக்கமுடியும்.
ஏனோ தெரியவில்லை சுமந்திரனுக்கு தமழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு பற்றி பேச முடிவதில்லை.. அவரது நோக்கம் எல்லாம் சிங்கள மக்களை கோபப்படுத்தாமல் திருப்திப்படுத்துவது மட்டும் தான்.
எமக்கு என்ன தீர்வு வேண்டும் என்று சிங்களவர்கள் முடிவெடுக்க முடியாது. மேலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய எந்த தேவையும் இல்லை. இந்த விடயத்தில் அவர்கள் கோபப்படவும் தேவையில்லை. ஏனென்றால் இலங்கை சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. சொல்லப்போனால்
அவர்கள் தான் வந்தேறு குடிகள். அவர்கள் எம்மை அடக்கி ஆட்சி செய்வது பற்றி நாம் தான் கோபப்பட வேண்டும்.
ஆனாலும் அவர்களிடம் நாம் கேட்பது எமது பூர்வீகத்தையே. அவர்களது நாட்டையோ அவர்களது சொத்தையோ தமழ்மக்கள் கேட்கவில்லை. இலங்கையில் தமிழ்பேசும் தேசிய இனம் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய தேசம் ஒன்றே எமக்கு சரியான தீர்வாக இருக்க முடியும்.
சரி இப்போது வரிச்சலுகைப் பிரச்சினையை பார்ப்போம்.
ஐரோப்பிய ஒன்றியத்தலிருந்து பிரித்தானியா விலகியுள்ளமையால் ஐரோப்பிய சந்தையும் சற்று வீழ்ச்சியடைந்துள்ளமையால் இந்த வரிச்சலுகை மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கிடைக்கும் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்படலாம். இதன்காரணமாக கோத்தா அரசு சலுகைகளில் தங்கியிருக்காமல் போட்டிச் சந்தையை எதிர்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. ஆனால் அது உடனடியாக சாத்தியப்பட முடியாது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையான பயங்கரவாத தடைச் சட்டத்தை சிறிலங்கா நீக்கப் போவதுமில்லை. எனவே இந்த வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் நீக்கப்படுவது உறுதியாகின்றது.
நீக்கப்பட்டால் என்ன நடக்கும்.. ஐரோப்பிய சந்தையில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டி ஏற்படும். இதன் காரணமாக விற்பனை குறைவடையும். மேலும் வரி செலுத்தப்படுவதால்அரசுக்கு கிடைக்கும் ஏற்றுமதி வருமானம் பெருமளவு குறைந்துவிடும். எனவே பொருளாதார சமனிலையை ஏற்படுத்த அரசு உள்நாட்டில் நூகர்வுப்பொருட்களின் விலைகளைஅதிகரிக்கும். உதாணமாக மகிந்தவின்ஆட்சிக்காலத்தில் விலைவாசி உயர்ந்தமையை குறிப்பிடலாம்.
விலைவாசி உயர்ந்தால் சிங்கள மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் அப்படி நடந்தால் 2015 இல் சிங்கள மக்களால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது போல் இனியும் நடக்கும் என்பது சுமந்திரனின் நம்பிக்கை..
திரும்பவும் முட்டுக் கொடுக்க அவர் தயாராகவே இருக்கிறார். பிறகென்ன மேலும் ஐநா சென்று கால அவகாசம் உள்ளக விசாரணை என்று இனப்படுகொலையாளிகளை காப்பாற்றலாம்..
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி உள்ள தீர்வு என்றும் வடக்கும் கிழக்கும் இணையாது என்றும் கூறி மக்களை ஏமாற்றலாம். எஸ.ரி.எவ் பாதுகாப்பு என்று சும்மா தெறிக்க விடலாம் என்று சுமந்திரன் காணும் கனவுகள் நடக்குமா நடக்காதா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும.
-நிறஞ்சன்-
கருத்துகள் இல்லை