நாளை பூஜை அறையில் இந்த 2 பொருட்களை வைத்து வழிபாடு செய்தால் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும்!

 


புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. புரட்டாசி மாதம் தொடங்கிய நாள் முதலே பெருமாள் கோவிலில் சிறப்பான வழிபாடுகள் தொடங்க ஆரம்பித்துவிடும். அதிலும் குறிப்பாக இந்த மாதம் புரட்டாசி மாதமானது வெள்ளிக்கிழமை அன்று, திருவோண நட்சத்திரத்தில், ஏகாதேசி அன்று பிறக்கின்றது. தாயாருக்கு, அதாவது மகாலட்சுமி அன்னைக்கு உகந்த இந்த வெள்ளிக்கிழமை தினத்தில் புரட்டாசி மாதம் பிறப்பதால், நம்முடைய வீட்டில் பெருமாளையும் தாயாரையும் நினைத்து சுலபமான முறையில் எப்படி பூஜை செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்றைய தினமே வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.


 பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களை துடைத்து வைத்துக்கொள்ளுங்கள். நாளைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு குறிப்பாக, உங்கள் உங்கள் வீட்டில் பெருமாளும் தாயாரும் சேர்ந்து இருக்கும் படம் இருந்தால், அந்த திருவுருவப்படத்திற்கு வாசனை மிகுந்த பூக்களாலும் துளசி இலைகளும் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். நாளைய தினம் வீட்டில் ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி அதில் திரிபோட்டு மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு. இந்த தீபத்தை ஏற்றும்போது உங்களுடைய வீட்டில் என்றைக்குமே வறுமை எனும் இருள்சூழ கூடாது.



 செல்வ செழிப்போடு உங்கள் இல்லம் என்றுமே பிரகாசமாக இருக்க வேண்டும் என்று மனதார தாயாரிடமும் பெருமாளிடமும் வேண்டி தீபத்தை ஏற்றுங்கள். அடுத்தபடியாக உங்களால் இயன்ற பிரசாதத்தை நிவேதனமாக வைக்கலாம். எதுவுமே நிவேதனமாக இனிப்பு பொருட்களை செய்ய முடியவில்லை என்றால் இரண்டு கற்கன்டுகள் வைத்தால் கூட போதுமானது.


அடுத்தபடியாக உங்கள் வீட்டில் புதியதாக இருக்கும் பச்சரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பித்தளை தட்டில், இரண்டு கைப்பிடி அளவு பச்சரிசியை கொட்டி உங்களுடைய கையாலேயே பரப்பி விட்டு, அந்த அரிசியில் ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை உங்களுடைய மோதிர விரலால் எழுதுங்கள். அரிசியின் மீது இந்த வார்த்தையை எடுத்துவிட்டு அந்த வார்த்தையின் மேல் இரண்டு துளசி இலைகளை வைத்து விடுங்கள்.


அதன் பின்பு இந்த தட்டிற்கு முன்னால் அமர்ந்து உங்களுக்கு வேண்டிய வரங்களை பெருமாளிடம் தாயாரிடமும் மனமுருகி கேட்க வேண்டும். ‘ஸ்ரீம்’ என்பது மகாலட்சுமி தாயாரின் மூல மந்திரமாக சொல்லப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக இறைவனுக்கு தீப ஆராதனை காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை நிறைவான பின்பு தட்டில் ஸ்ரீம் என்று எழுதி அதன் மேலே துளசியை வைத்து இருக்கிறீர்கள் அல்லவா. அந்த தட்டை அப்படியே எடுத்து உங்கள் வீட்டு பீரோவில் வைத்து விடுங்கள்.


வெள்ளிக்கிழமை தினம் முழுவதும் அது அப்படியே உங்கள் வீட்டு பீரோவில் இருக்கட்டும். சனிக்கிழமை அந்த அரிசியை எடுத்து சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை செய்து வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிட்டு விடலாம். (இந்த பொங்கல் பொங்கி வழிவது போல உங்கள் வீட்டில் செல்வ கடாட்சமும் நிரம்பி வழியும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.)





இந்த அரிசியின் மேல் வைத்த துளசி இலையை மட்டும் உங்கள் வீட்டு பீரோவில் வைத்து விடுங்கள். காலை நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் இந்த பூஜையை மாலையும் செய்யலாம். நாளைய தினம் நம்பிக்கையோடு பச்சரிசியையும் துளசியை வைத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் பூஜை செய்வதன் மூலம் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களுக்கு சீக்கிரத்திலேயே விமோசனம் கிடைக்கும்.


நாளைய தினம் அனைவருக்கும் மகாலட்சுமியின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று அந்த பெருமாளிடம் மனமுருகி வேண்டி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.