ஒரேநாளில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி!


 நாடு முழுவதும் இன்று ஒரேநாளில் 2 கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி செலுத்தி இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள் இன்று(செப்டம்பர் 17) கொண்டாடப்பட்டது. பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும். தடுப்பூசி போடாதவர்கள் தவறாமல் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அதுவே பிரதமருக்கு நீங்கள் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு” என்று நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதன்படி இன்று ஒரேநாளில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அதற்காக, நாட்டின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன.

இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் மதியம் 1.30 மணியளவில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த எண்ணிக்கை பிற்பகல் 3 மணியளவில் 1.33 கோடியாக உயர்ந்தது. மாலை 5.15 மணியளவில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒரு கோடியே 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியதுதான் இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில், இன்று 2 கோடி பேருக்கு செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.

தடுப்பூசி செலுத்துவதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்திருந்தாலும், தடுப்பூசி செலுத்துவதற்கான நேரம் இன்னும் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 78 கோடியாக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது இந்தியா, பிரதமர் நரேந்திர மோடிக்கு அளித்த பரிசாகும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பெருமை பாராட்டியுள்ளார்.

இதற்கு முன்னோடி தமிழ்நாடுதான்.ஏனெனில், கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு தமிழ்நாடு அரசிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.