வீட்டிலிருந்து சகோதரர்கள் சடலமாக மீட்பு!


 கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சகோதரர்கள் இருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பூகொட – யகம்பே பகுதியை சேர்ந்த  43 வயதுடைய சகோதரியும் , 38 வயதுடைய சகோதரனும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உறவினர் ஒருவர் அவர்களின் வீட்டுக்கு சென்ற போது , அவர்கள் இருவரும் வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சடலத்தை மீட்டு வத்துபிடிவல ஆதார வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.

வைத்திய சாலையில் இரு சடலங்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட போது , இருவருக்கும் தொற்று இருந்தது உறுதியானது. அதனை அடுத்து சடலத்தை சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து , தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.