கொரோனா தொடர்பில் பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு!!
கொரோனா வைரஸ் சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 180 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த தெரிவித்தார். இதேவேளை, சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது தொடர்பாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார்.
குழந்தையின் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் கொரோனா தொற்று அறிகுறிகளை அடையாளம் காண முடியும் என்று வைத்தியர் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்கள் நடக்கும்போது வழக்கத்தை விட கடினமான சோர்வுடன் காணப்படுகின்றனரா? மிகக் குறைந்த தூரம் நடக்கும்போது நிற்கின்றனரா ? உட்காருகின்றனரா ? சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கின்றதா? சிறுவர்களின் உதடுகள் கருப்பு நிறமாக மாறுகின்றதா? கண் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா? சருமத்தில் மாற்றத்தைக் காணக்கூடியதாகவுள்ளதா ? இத்தகைய அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களின் ஒக்ஸிஜன் அளவு குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டும் அறிகுறியாகும் என்று வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் இத்தகைய அறிகுறிகளைக் கவனிப்பது மிகவும் கடினம் என்று அவர் மேலும் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை