கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் குறித்த அறிவிப்பு


 இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 1,952 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இதற்கமைய, இதுவரை 386,509 தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 462,767 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 10,140 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 68,070 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.