கனடாவில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டதுடன் பலர் பலி!!


கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,267பேர் பாதிக்கப்பட்டதோடு 65பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 20ஆயிரத்து 126பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 819பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 44ஆயிரத்து 3580பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 15இலட்சத்து 47ஆயிரத்து 949பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.