ஆனந்த சங்கரியின் மகன் கனேடிய தேர்தலில் அபார வெற்றி!!
கனடிய தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அபார வெற்றி பெற்றதுடன், கனடிய பொது தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ (justin trudeau) லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுகிறது.
இதன்மூலம் ஜஸ்டின் ட்ரூடோ (justin trudeau) மீண்டும் மூன்றாவது முறை கனடாவின் பிரதமராகிறார். இந்த நிலையில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான ஹரி ஆனந்தசங்கரி 16051 வாக்குவள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் மொத்தமாக 23,901 வாக்குகளை பெற்றுள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் Zia Choudhary 8059 வாக்குகளை பெற்று தோல்விடைந்தார்.
கனடாவின் Scarborough—Rouge Park தொகுதியில் இருந்து ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றுள்ளார்.
இதேவேளை ஹரி ஆனந்தசங்கரி , இலங்கையில் பிரபல அரசியல்வாதி வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை