குற்றச்சாடப்பட்டுள்ள சாவகச்சோி வைத்தியசாலை!


கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் விடயத்திலும், தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் விடயத்திலும்   யாழ்ப்பாணம் சாவகச்சோி வைத்தியசாலை நிர்வாகம் அசமந்தமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்தவாரம் உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளரான ஞா. பிரகாஸ் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 2ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அங்கு பதிவு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதங்கள் உள்ளிட்டவற்றால் அவருக்கான சிகிச்சை கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டமையால் அவர் உயிரிழந்திருந்தாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.

அதேவேளை பிரகாஸ் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு , 10 வயது முதல் முற்றாக தனது நடையை இழந்து சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்தவர். அவ்வாறான நோய் தொற்றுக்கு உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் , மூச்சு விடுவதில் சிரமங்கள் காணப்படும். இந்த நிலையில் கொரோனோ தொற்று உறுதியான பின்னரும் அவரை வீட்டில் இருக்குமாறே கூறப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இவ்வாறான நிலையில் பிரகாஸின் சகோதரர் ஞா.கிஷோர் தனது முகநூலில் பதிவில்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்கு செல்லும் கொரோனா நோயாளிகள் உயிர் ஆபத்தை எதிர்நோக்கும் நிலைமையே காணப்படுகின்றது. சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்று அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுபவர், அவருக்கு இருக்கும் ஏனைய நோய் நிலைமைகள் தொடர்பில் வைத்தியருக்கு தெரியப்படுத்தினாலும் அவரது வீட்டில் வைத்து பாராமரிக்கவே அனுப்பப்படுகின்றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.