தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியவர் மரணம்!
யாழில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கு றித்த சம்பவம் யாழ்.பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், மந்திகை வைத்தியசாலையில் 10 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் விடு சென்றவர் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது இறப்பின்னர் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை