கோப்பாய் பொலிஸ் அதிகாரி மீது முறைப்பாடு!!


 யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்கவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் களனி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

அவர் மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த முறைப்பாடுகளை அடுத்து இந்த இடமாற்றம் பொலிஸ் உயர்மட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

களனி பொலிஸ் பிராந்தியத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டு சூப்பர் நியூமரரி நிலை (Supernumerary position) என்ற வகையில் அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் அச்சுறுத்தல், கையூட்டுப் பெறல், முறைப்பாடுகளை தட்டிக்கழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ப்ரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பட்டு வந்த நிலையில் குறித்த பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.