மேலும் 71 பேர் இலங்கையில் கொரோனாவால் மரணம்!

 


இலங்கயில் இன்று இதுவரையில் மாலை வரை 747 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 513 278 ஆக உயர்வடைந்துள்ளது.  

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 454 532 பேர் குணமடைந்துள்ளனர். 46 066 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 71 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 12 680 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 32 ஆண்களும் 39 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 56 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.