கொரோனா வடிவிலான தங்க காதணிகள் மக்களிடையே பிரபலம்!!

 


கொரோனா நோய் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல கோடி பேர் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் வித்தியாசமான பொருட்களை கண்டுபிடித்து விற்பனை செய்து மக்களை வணிகர்கள் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் கொரோனா வைரஸ் வடிவிலான போண்டா, தோசை, முகக்கவசம், புரோட்டா என பல்வேறு பொருட்களை கண்டுபிடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் கொரோனா வைரஸ் வடிவில் தங்கத் தோடு விற்பனைக்கு வந்துள்ளது.  

மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் கொரோனா வைரஸ் போன்று வடிவமைக்கப்பட்ட காதணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து 7.8 கிராம் எடை கொரோனா வைரஸ் வடிவிலான காதணிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.