கொரோனாவுக்கு ஒரே நாளில் தாயும் மகளும் பலி!


 புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வேப்பமடு பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வந்த தாயும் , மகளும் கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் (08) உயிரிழந்துள்ளனர்.


புத்தளம் மன்னார் வீதி, வேப்பமடு பகுதியில் வசித்து வந்த சித்தி அஜிபா (வயது 51) மற்றும் அவரது மகள் பாத்திமா சஹானா (வயது 37) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்

இவ்வாறு உயிரிழந்த குறித்த தாயும், மகளும் ஒரே வீட்டில் வசித்து வந்தவர்கள் எனவும் குறித்த தாய் திங்கட்கிழமை (06) காலையும், அவரது மகள் அதே தினத்தன்று நண்பகல் வேளையும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த குறித்த தாயும், மகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவ்விருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த தாயினதும், மகளினதும் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று புத்தளத்திலிருந்து குருநாகலுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உயிரிழந்த சித்தி அஜிபா எனும் 51 வயதானவரின் கணவரான முஹம்மது நிஸ்தார் (வயது 56) என்பவரும் கடந்த 4ம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.