இந்தக் கட்டுப்பாடுகளுடனே ஊரடங்கு தளர்த்தப்படும்!!

 


நாட்டில் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் நாடு மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இரவு நேர ஊரடங்வை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் அமுலாகும். அதன்படி, திருமணங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகின்றது.

மேலும், குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்கும் விழாக்களை வீடுகளில் மட்டுமே நடத்த அனுமதிக்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் இறுதிச் சடங்குகள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனதெரிய வருகிறது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.