பெண்ணொருவர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் இனம் காணப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கணவனை பிரிந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிவரும் 32 அகவையுடைய பிரதீபன் புஸ்பராணி எனும் இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முடிவுகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை