நாட்டுக்கு மற்றுமொரு பாரிய ஆபத்து!!


கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வின் உச்சம் இப்போது இலங்கையில் முடிந்துவிட்டபோதும் எதிர்வரும் வாரங்களில் மற்றொரு உச்சம் ஏற்பட இன்னும் 60 வீத வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே, மற்றொரு பெரிய உச்சத்தைத் தடுக்க, மக்கள் எப்போதும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டுமென சமூக மருத்துவப் பேராசிரியர், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனத் அகம்பொடி ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொது நடமாட்டம் கடுமையாக குறைந்துள்ளதால், நாட்டில் இறப்புகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கையில் மிகவும் தொற்றக்கூடிய டெல்டா வகையின் உச்சம் முடிந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர். எனினும், ஏனைய நாடுகளில் இருக்கும் கடுமையான பிறழ்வுகளுடன் வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் மற்றொரு உச்சம் ஏற்பட இன்னும் 60வீத வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் எப்போதும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசிகள் கொரோனா பரவுவதைத் தடுக்கலாம் என்ற தவறான பாசாங்கு மூலம் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்குமெ அன்றி கொரோனா பரவலைத் தடுக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.