காட்டு யானை ஒன்றின் சடலம் கண்டுபிடிப்பு

 


மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்றின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தனமல்வில பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கலவெல்கல பிரதேசத்தில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி குறித்த காட்டு யானை உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்த காட்டு யானை சுமார் 18 - 20 வயது மதிக்கத்தக்கது என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மின்சார வேலியை அமைத்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.