ஒட்சிசன் செறிவூட்டிகளை வழங்கியமைக்கு இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் வியட்நாமிய தூதுவர்!

 


கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட வேளையில், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கு ஒட்சிசன் மற்றும் ஒட்சிசன் செறிவூட்டல்களை வழங்கியமைக்கு வியட்நாமின் தூதுவர் பாம் சான் சாவ்  இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ANI செய்திச் சேவைக்கு அவர் கூறியுள்ளதாவது, “ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற சரியான நேரத்தில் ஒட்சிசன் மற்றும் ஒட்சிசன் செறிவூட்டல்களை இந்திய அரசு வழங்கியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

இது இந்திய கடற்படையின் கப்பல்  ஊடாக வழங்கப்பட்டது. இதை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதுடெல்லியின் சாணக்கியபுரியில் வியட்நாமின் ஸ்தாபகத் தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான ஹோ சிமின் சிலை நிறுவும் விழாவில் பாம் சான் சாவ் மற்றும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் கலாச்சார இராஜாங்க அமைச்சர் மீனகாஷி லேகி கலந்து கொண்டனர்.

இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த லேகி, “மகாத்மா காந்தி பெரும்பாலானோரின் இதயங்களில் இன்னும் வாழ்கின்றார். அதேபோன்று ஹோ சி மின் எங்கள் ஹீரோ, அவர் எங்கள் இதயங்களில் வாழ்கிறார்.

மேலும், இந்தியாவின் அதிகார வரம்புகளைத் தாண்டி இந்தியாவில் ஆத்மாக்களை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் தலைமுறைகளை ஊக்கப்படுத்திய பல தலைவர்கள் மூலம் அந்த ஆத்மாக்கள் வாழ்கின்றன. என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.