பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ!!

 


கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிகாலை 1:40 நிலவரப்படி மக்களவையில் உள்ள 338 இடங்களில் 156 இடங்களில் வெற்றிபெற்று முன்னிலைப் பெறுகின்றது. 2019ஆம் ஆண்டின் கடைசி வாக்கெடுப்பில் இருந்து சிறிது மாற்றம் ஏற்பட்டது. எனினும் பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல.

முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்; கட்சிக்கு 122 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அவர்கள் கடந்த முறை வென்றதை விட கூடுதலாக ஒன்று.
இந்திய வம்சாவளியைச் ஜக்மீத் சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரெட் கட்சி 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மை பெற 170 இடங்கள் தேவைப்படும். கடந்த தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 இடங்களே கிடைத்தன.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தார்.

2023ஆம் ஆண்டு அடுத்த தேர்தல் நடைபெறவேண்டிய நிலையில், அங்கு முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டது. கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடந்திருக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.

மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்போது தேவையற்ற வகையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக ஜஸ்டின் ட்ரூடோ மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.