தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில்!!
தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம், கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஈகச்சுடரினையும் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் திலீபனின் நினைவேந்தனை முன்னிட்டு ஒன்றுக் கூடுவதனை தடுக்கும் நோக்கில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியாகி திலீபன் 1987 ஆண்டு புரட்டாதி மாதம் 15 ஆம் திகதி 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில், நீராகாரம் ஏதுமின்றிய அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு புரட்டாதி 26 ஆம் திகதி வீரச்சாவினை தழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை