காதலிக்க நேரமில்லை..!காதலிப்பார் யாருமில்லை...!


 திருமணமான தம்பதிகள் தங்களின் தாம்பத்திய உறவுகளில் நாட்டம் இல்லாமல் அல்லது தாம்பத்திய விஷயங்கள் நடைபெறாமல் பல்வேறு இன்னனலை சந்திக்க தொடங்கி இருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது. அளவுகடந்த காதலையும், பரிசையும் பகிர்ந்துகொண்ட காதல் ஜோடிகள் கூட, திருமணத்திற்கு பின்னர் அதே தீவிரத்துடன் அன்பை பரிமாறுவது கிடையாது என்றும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் தற்போது குழந்தைகள் பிரபு விகிதம் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியுள்ள நிலையில், சீனா முன்னதாகவே சுதாரித்துக்கொண்டு கூடுதலாக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதனைப்போன்று ஜப்பான், வடகொரியா போன்ற நாடும் குழந்தைகளை அதிகளவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

மக்கள் தொகையில் அடர்த்தியான நாடாக கடுத்தப்படும் சீனாவில் கூட டேட்டிங் செயலிகள் மற்றும் அதற்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் தென்னிந்திய மக்களின் தாம்பத்திய வாழ்க்கை குறித்த விஷயங்கள் பல்வேறு சிந்தனைகளை எழுப்பியுள்ளது. ஆசை 60 நாட்கள், மோகம் 30 நாட்கள் என்ற பழமொழிக்கேற்ப, ஜப்பான் நாட்டில் தனியார் அமைப்பு மேற்கொண்ட சோதனையில், 50 விழுக்காடு திருமணமான தம்பதிகள் மாதக்கணக்கில் தாம்பத்தியம் வைத்துக்கொள்வதில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் Sexless Marriage என்று அழைக்கப்படும் தம்பதியமில்லா திருமணம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விசயத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, அந்நாட்டு மக்களின் வேலை நேரம் ஆகும். பணிசுமையின் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் மன அழுத்தத்தால் தவிக்கும் நிலையில், மக்களின் வேலை நேரம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த 2016 ஆம் வருடம் நடந்த ஆய்வுகளின் படி, திருமணம் முடிந்த 20 விழுக்காடு தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில்லை என தெரியவந்துள்ளது. சீனாவில் உள்ள ஹாங்காங் நகரில் திருமணம் முடிந்த 31.6 % தம்பதிகள் தாம்பத்தியமில்லா திருமணத்தை செய்துள்ளனர் என கூறப்படுகிறது. 50 வயதுக்கும் அதிகமான தம்பதிகளில் 10 விழுக்காடு நபர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக உறவுகள் வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. உலகளவிலான நிலவரம் இப்படியிருக்க, உள்ளூர் நிலவரம் மிகவும் மோசமாகியுள்ளது.

கடந்த 2013 ஆம் வருடம் நடந்த ஆய்வுகளின் படி, திருமணம் முடிந்த 20 % தம்பதிகள் வாரத்தில் ஒரு முறைக்கு மேல் மட்டுமே தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டுள்ளனர். பிற 80 விழுக்காடு நபர்கள் பாலியல் இழப்பு அல்லது தம்பதியமற்ற திருமண வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 2015 ஆம் வருட ஆய்வுகளின் படி வட இந்தியர்களை விட, தென்னிந்தியர்கள் குறைவான விழுக்காட்டிலேயே தாம்பத்தியம் வைத்துக்கொண்டுள்ளனர். மத்திய பிரதேசம், பஞ்சாப், இராஜஸ்தான், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலத்தில் தாம்பத்திய உறவுகளை அதிகளவு வைத்துக்கொண்டுள்ளனர். 

தென்னிந்திய மாநிலங்களில் இருக்கும் ஆந்திர பிரதேசம் மாநிலத்தை தவிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தை விடவும் கேரளாவின் தாம்பத்திய உறவுகள் தம்பதிகளுக்குள் இணக்கத்தை அதிகளவு ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே அருணாச்சல பிரதேசம் மாநிலம் தாம்பத்திய செயல்திறனில் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. வடஇந்தியர்கள் பாலியல் உறவில் நாட்டத்துடன் இருந்தாலும், உலகை ஒப்பிடுகையில் அது குறைவே எனவும் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் விவாகரத்து போன்ற விஷயங்களுக்கு தாம்பத்தியமும், அதன் அணுகுமுறையும் தற்போது பெரும் தலைவலியாக வந்துள்ளது. 

தற்போதுள்ள நிலையில் ஆணோ/பெண்ணோ பணிக்கு என சென்றால் 8 மணிநேரம் முதல் 10 மணிநேரம் வரை வேலை. பயண நேரம் காலை மாலை என 4 மணிநேரம். சனிக்கிழமை மற்றும் ஞாயிறும் வேலை. இத்துனை செயல்களுக்கு மத்தியில் குடும்ப பொறுப்பு என்று பல நெருக்கடி. இதனால் காதலிப்பதற்கு நேரமில்லை. ஒரு தனிமனிதனின் உடலாற்றல் அலுவலத்தில் பணி சுமையால் உறிஞ்சு, வீட்டிக்கு செல்லும் போது தாம்பத்திய ஆசை எஞ்சியிருந்தாலும், அதன்போது செயலாற்ற உடலில் பலம் இருப்பதில்லை. இதனால் ஆண்களோ/பெண்களோ பல்வேறு காரணத்திற்காக மாற்று நபர்களுடன் உறவு வைத்துக்கொள்ள தொடங்கி விவாகரத்து, பிரிவு, கொலை என பல சம்பவங்களும் நடக்க தொடங்குகிறது. 

நிறுவனங்கள் தனது பணியாளர்களின் வேலைச்சுமையை குறைப்பது போன்ற நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே இனி வரும் வருடங்களில் நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்ந்து உயரும். பொதுவான கருத்து ஒன்று இருக்கும் தொழிலாளர்களின் நலனை நாடும் நிறுவனமே உயர்வு பெரும் என்று., அந்த நலன் அவர்களுக்கு போனஸ் வழங்குவது, ஊதிய உயர்வு கொடுப்பது, பொறுப்பு வழங்குவது என்பதோடு நின்றுவிடாமல் மறைமுகமாக பணியாளர்களின் நேரத்தை குறைத்துக்கொடுப்பது, மாதத்தின் 4 நாட்கள் + கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை எடுத்து, குடும்பத்துடன் நேரம் செலவிட உதவி செய்வது என செயல்படலாம். இப்போது இல்லை என்றாலும் இன்னும் 20 முதல் 30 வருடத்தில் அதனை அரசே செய்ய வைக்கும் காலமும் வரும் என்பதே நிதர்சனம்.

அன்றைய காலங்களில் கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் பெரியோர்கள் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளை கவனித்துக்கொண்டு, இளம் ஜோடிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு மறைமுகமான ஒளியேற்றி மகிழ்ந்தார்கள். ஆனால், இன்றோ கலாச்சாரம், கூட்டுக்குடும்பம் தவறா? சரியா? என போலி பேச்சுக்களை பேசி, தம்பதிகளின் தலையில் பல பொறுப்புகள் என்ற பாறாங்கல் ஏறி, அவர்களின் அமைதி, பேச்சுத்துணையின்மை போன்றவை அதிகரித்து பின்னாளில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. 

காதலிக்க நேரமில்லை., காதலிப்பார் யாருமில்லை....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.