கொலையில் வெளிநாட்டு கும்பலின் உத்தரவு!

 


யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை செய்யவில்லை அது கொலை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நாடாளுமன்றத்தில் இன்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு வன்முறை கும்பலின் பேரில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார். மேலும், இறந்த மாணவனின் உறவுகளால் வழங்கப்பட்ட கடிதத்தை சபையில் வாசித்துக் காட்டி நீதி கோரியுள்ளார்.

இவர், 3 ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன், தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில், உயிரிழந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.