ஆழ்கடலில்..கவிதை..!
அலைகடல் ஓசை அடங்கி விட்டதுஆழ்கடல் அமைதி அருகில் வந்தது...
ஆபத்தும் அருகில் நெருங்கு கின்றது
ஆவெனச் சுற்றிடும் சுறாக்கள் கூட்டம்...
அவசரம் இப்போது அறவே வேண்டாம்
அமைதியில் தனித்திரு ஆபத்து நீங்கும்...
அலைவழி சென்றிடு காற்றின் கரம்பிடித்தே
அமைதித் தீவு அடுத்து வருமே...
அதுவரை பொறுத்திரு படைத்வன் நினைவிலே
அகன்றிடும் தீமைச் சுறாக்கள் தாமாகவே...!
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை